search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய போர் விமானம்"

    பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த இரு போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக அறிவித்துள்ள அந்நாட்டின் ராணுவம், கைதான இந்திய விமானியின் பெயர் மற்றும் அவரது விமானப்படை அடையாள எண்ணை வெளியிட்டது. #Indianaircraftshot #Indianpilotsarrested
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் எல்லைக்குள் இன்று நுழைந்த இரு போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வீழ்த்தப்பட்ட இரு விமானங்களில் ஒன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரின் கோஹி ரட்டா பகுதியில் விழுந்து தீப்பற்றி எரியும் காட்சிகளை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

    மேலும் ஒரு போர் விமானம் இந்தியாவின் காஷ்மீர் பகுதிக்குள் விழுந்ததாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையில், பாகிஸ்தான் பகுதிக்குள் விழுந்த இந்திய போர் விமானத்தில் வந்த இரு விமானிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கபூர் தெரிவித்துள்ளார்.

    கைதான மற்றொரு இந்திய விமானி தன்னுடைய பெயர் மற்றும் விமானப்படையில் தனது பணி அடையாள எண் ஆகியவற்றை அந்நாட்டு அதிகாரிகளிடம் தெரிவிக்கும் வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.



    எனது பெயர் அபினந்தன். நான் விமானப்படை விங் கமாண்டர் அதிகாரி. என்னுடைய பணி அடையாள (service No) எண்: 27 981 என அந்நபர் கூறும் வீடியோ மற்றும் அவரது புகைப்படங்களை பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. #Indianaircraftshot #Indianpilotsarrested #Surgicalstrike2 #IAFattack
    ராஜஸ்தான் மாநிலம், பொக்ரான் பகுதியில் இன்று இந்திய போர் விமானங்களின் நிகழ்த்திய மெய்சிலிர்க்கும் சாகசங்களை விமானப்படை தளபதி, சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். #IAchief #SachinTendulkar
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் முன்னர் இந்தியா வெற்றிகரமாக அணுகுண்டு சோதனை நடத்திய பொக்ரான் பகுதியில்  இந்திய விமானப்படையின் வல்லைமையையும், நமது வெடிகுண்டுகளின் ஆற்றலையும் பறைசாற்றும் வகையில் ‘வாயு சக்தி’ என்று போர் சாகசப் பயிற்சிகள் இன்று நடைபெற்றன.



    இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்து, சக்தி வாய்ந்த குண்டுகளை வீசி சாகங்களை நிகழ்த்தின.



    மெய்சிலிர்க்கும் இந்த சாகசக் காட்சிகளை இந்திய விமானப்படை தளபதி பி.எஸ். தனோவா, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். #IAchief #BSDhanoa #SachinTendulkar #IAchiefwitness #Sachinwitness #VayuShakti2019 #Pokranrange
    இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள பனிமலையில் 1968-ம் ஆண்டு விபத்துக்குள்ளான இந்திய போர் விமானத்தில் பலியானவரின் பிரேதம் உறைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. #IAFPlaneCrash
    சிம்லா:

    இந்திய விமானப்படைக்கு சொந்தமான AN-12 ரகப் போர் விமானம் கடந்த 7-2-1968 அன்று பஞ்சாப் மாநிலம், சண்டிகர் நகரில் இருந்து காஷ்மீரில் உள்ள லே பனிமலை பகுதியை நோக்கி 102 வீரர்களுடன் புறப்பட்டு சென்றது.

    பருவநிலை சாதகமாக இல்லாததால் அந்த விமானத்தை சண்டிகர் நகருக்கு திருப்பி கொண்டுவர விமானி முயற்சித்த நிலையில் தரையில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்த அந்த விமானம் திடீரென்று மாயமானது.

    நீண்ட தேடலுக்கு பின்னர் இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள லாஹவுல் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2003-ம் ஆண்டு அந்த போர் விமானத்தின் சில பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.


    இந்நிலையில், இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள தாக்கா பனிமுகட்டில் தூய்மை பணியில் சில மலையேற்றக் குழுவினர் சமீபத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது, 1968-ம் ஆண்டு இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள பனிமலையில் விபத்துக்குள்ளான இந்திய போர் விமானத்தில் பலியானவரின் பிரேதம் உறைந்த நிலையில் 1-7-2018 அன்று கண்டெடுக்கப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதே பகுதியில் விமானத்தின் சில பாகங்களும் காணப்பட்டதாக மலையேற்ற குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.#IAFPlaneCrash #HimachalIAFPlaneCrash #FrozenBodyFound 
    ×